2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன், பரீத், கஜன்)


திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் 10ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இக்கூட்டத்தின் முதல் அமர்வில்  முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தண்டாயுதபாணியும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் ஏ.எல்.ரபாய்தீன் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்ததுடன், செயலாளர் கீத பொன்கலன் வரவேற்புரையாற்றினார்.

ஊடகப்பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்களை முதலமைச்சர் மற்றும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.  இதேவேளை, ஊடகவியலாளர் சங்கம் அங்கத்தவர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருவிகளே இவ்வாறு வழங்கப்பட்டன.

ஏலவே சங்கம் தமது உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்த நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதமாலெப்பையின் நிதி ஒதுக்கிட்டில் இருந்து புகைப்பட கருவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களின் குறைகளைத் தீர்க்கவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக முதலமைச்சர் தனது உரையின்போது உறுதியளித்தார்.

இரண்டாவது அமர்வில் சங்கத்தின் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு மேற்கொள்ளப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .