2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலக வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபைக்கு விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா நகரசபை தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் செயற்படுத்தப்பட்டுவரும் புறநெகும திட்டத்தின் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுகள் சம்பந்தமாக பார்வையிடவென உலக வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபைக்கு வியாழக் கிழமை(10) வருகை தந்து புறநெகும அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு நடைமுறைகளை பார்வையிட்டனர்.

புறநெகும திட்டத்தின் மூலமாக அமைக்கப்பட்டுவரும் கட்டையாறு பூங்கா, சின்னக் கிண்ணியா மரக்கறி சந்தை, துறையடியில் அமைக்கப்படும் விருந்தினர் விடுதி, றஹ்மானியா சிறுவர் பூங்கா, மட்டக்களப்பு வீதி தோனா பொது பூங்கா ஆகியவற்றின் மீளாய்வு நிலைகளை பார்வையிட்டதோடு குறித்த திட்டங்களை மிக விரைவாக நிறைவு செய்யும் நிலை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கிண்ணியா நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத் கிண்ணியா நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி திட்ட மீளாய்வு சம்பந்தமாக பிரசன்டேன் ஒன்றினையும் வழங்கினார் அத்தோடு வருகை தந்த பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபை பாராட்டியதோடு மேலும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு தங்களால் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர். இறுதியில் உலக வங்கி பிரதிநிதிகள் புறநெகும திட்டங்களின் குறைநிறைகளை அப்பிரதேச மக்களிடம் கேட்டறிந்ததோடு திருப்திகரத்தன்மையையும் அறிந்து கொண்டனர்.

நிகழ்வில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், உலக வங்கி பிரதிநிதிகள், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், உதவி உள்ளூராட்சி ஆணையாளர், பொறியியலாளர்கள், நகரசபை செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர், புறநெகும திட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .