2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆர்ஜன்டீனா தோல்வி;மரடோனா அதிர்ச்சி: கோட்டை விட்டது யார்...?

Super User   / 2010 ஜூலை 03 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால் இறுதிப்போட்டியில் ஆர்ஜன்டீனா,ஜெர்மனி ஆகிய நாடுகள் மோதின.மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் 4-0 என்ற நிலையில் ஜெர்மனி அபார வெற்றியீட்டியது.ஆர்ஜன்டீனாவின் தோல்வி,அதன் பயிற்றுவிப்பாளரும்,உதைப்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னருமான டியாகோ மரடோனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதை படத்தில் காணலாம்.

You May Also Like

  Comments - 0

  • Abira Mayuran Sunday, 04 July 2010 01:13 PM

    தோமஸ் முலர் பந்து பொறுக்கும் இளைஞன் அல்ல, கோல் போடும் வீரர் ! (Thomas Muller is not a ball boy, but Goal boy!)
    ஆரஜென்ரீனா நாட்டு பயிற்சியாளரான மரடடோனாவினால்(Diego Maradona)பந்து பொறுக்கும் பையன் என்று வர்ணிக்கப்பட்ட 20 வயதுடைய ஜேட்மணிநாட்டு கால்பந்தாட்ட வீரர் தோமஸ் முலர் , அர்ஜென்ரீனாவிற்கு எதிராக முதல் கோலை போட்டு ஜேர்மணி நாட்டின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.
    தென் ஆபிரிக்காவில் நடை பெற்றுவரும் 2010 உலக கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகளின் கால் அரை இறுதி போட்டியில் ஆர்ஜென்ரீனாவும் , ஜேர்மணியும் சனிக்கிழமை மோத இருந்த வேளையில், இரு நாடுகளின் பயிற்சியாளர்களும் ஊடகவியாளர்களை கடந்த வியாழக்கிழமை சந்திப்பதாக இருந்தது. ஆர்ஜென்ரினா நாட்டின் பயிற்சியாளரான முன்னாள் உலக புகழ் உதைபந்தாட்ட வீரர் மரடோனா ஊடவியாளர்களை சந்திப்பதற்கு வந்த வேளை ,அங்கு ஜேர்மணி நாட்டு பயிற்ச்சியாளர் இல்லாது, அவருக்கு பதிலாக அந்நாட்டு இருபது வயதுடைய இளம் வீரான தோமஸ் முலர் அங்கு ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். தோமஸ் முலர் இருப்பதினை பார்த்ததும், மரடோனா யார் இந்த பந்து பொறுக்கும் பையன் , இவருடன் நான் சமனா இருந்து ஊடகவியாளர்களை சந்திக்முடியாது என்று எழுந்து சென்று இருந்தார். பின்னர் தோமஸ் முலர் எழுந்து ஊடகவியலாளர் சந்திப்பு அறையினை விட்டு வெளியேறிய பின்னரே மரடோனா வந்து கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார்.
    உலக கோப்பைக்கான போட்டிகளில் ஜெர்மண் நாட்டு அணியில் சிறப்பாக ஆடிவரும் தோமஸ் முலர் என்ற வீரரை மரடோனாவிற்கு தெரியாது இருக்கமுடியாது குறிப்பாக பிரித்தானியாவிற்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை போட்டு இருந்த முலரின் முகத்தினை ஒரு பயிற்சியாளராக இருப்பவர் மறப்பது என்பது சாத்தியமானது அல்ல என்றும் ஜேர்மணி நாட்டு ஊடகங்கள் சில கருத்து கூறியிருந்தன. மரடோன ஒரு கர்வம் பிடித்தவர் என ஒரு ஜேர்மண் நாட்டு ஊடகம் விமர்சித்து இருந்தது. ஜேர்மணி நாட்டின் பயிற்சியாளர் ஜோசிம் லோவ் (Joachim Loew) தன்னுடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்திக்காது, ஒரு இளம் வீரரை அனுப்பியதினை விரும்பாத காரணத்திலாலேயே மரடோனா, தோமஸ் முலரை தனக்கு தெரியாது என்றும், அவரை பந்து பொறுக்கும் பையன் என எண்ணியதாக கூறியிருந்தாக ஜேர்மண் ஊடகங்கள் சில மேலும் தெரிவித்து இருந்தன.இந்த சம்பவம் குறித்து தனது தரப்பில் கருத்து கூறிய தோமஸ் முலர் “ நான் யார் என்பதினை போட்டியின் போது மரடோனா தெரிந்து கொள்வார்” என்று கூறியிருந்தார்.
    இந்நிலையில் சனிக்கிழமை இவ் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கால் அரை இறுதி போட்டி ஆரம்பமாகி மூன்று நிமிடத்தில் சுவான்ஸ்ரைகர் என்ற வீரர் எடுத்து அடிந்த பந்தினை தோமஸ் முலர் தலையினால் ஆர்ஜன்ரீனா பக்க வலைக்குள் செலுத்தி கோல்போட்டு உள்ளார்.
    தோமஸ் முலர் கூறியது போன்று தான் பந்து பொறுக்கும் பையன் அல்ல, கோல் போடும் இளைஞன் என்பதினை மரடோடாவிற்கு காண்பித்துள்ளார். 2010 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பையினை வெல்லும் நாடுகளின் ஒன்று என்று கருதப்பட்ட சிறந்த அணியான ஆர்ஜென்ரீனாவை, ஜேர்மணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐயிரோப்பிய நடப்பு சம்பியன் ஆன ஸ்பானிய நாட்டுடன் ஜேர்மணி அரை இறுதியில் மோத உள்ளது குறிப்பிடதக்கது.
    அபிரா மயூரன்

    Reply : 0       0

    Abira Mayuran Sunday, 04 July 2010 01:25 PM

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .