2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உயிரின பல்வகைமையை பாதுகாத்தல்

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

“இன்சி சீமெந்து” என புதிதாக பெயர் மாற்றப்பட்டுள்ள ஹொல்சிம் சீமெந்து உற்பத்தி நிறுவனம், புத்தளம் மாவட்டத்திலுள்ள எழுவன்குளம் அருவகாட்டில், வண்டுகள், ஊர்ந்துசெல்லும் பிராணிகள், பூச்சிகளை  பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

புத்தளம் அருவக்காட்டில், சீமெந்து உற்பத்தி செய்வதற்காக, இன்சி சீமெந்து நிறுவனத்தினால் (ஹொல்சிம்) சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கு தேவையான நிலப்பரப்பு, துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு காடுகளை அழித்து சுத்தம் செய்யும்போது, அங்கு வாழும் மேற்படி உயிரினங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளன. இதனை கவனத்திற்கொண்ட மேற்படி அமைப்பினர், குறித்த உயிரினங்களை  பிடித்து, வாழக்கூடிய இடங்களில் மீண்டும் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் 7ஆவது தடவையாக, கடந்த புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில், மொறட்டுவப் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் பீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த இந்த வேலைத்திட்டத்தில் முதல்நாள் அடையாளம் காணப்பட்ட குறித்த உயிரினங்கள பாதுகாப்பாக பிடிக்கப்பட்டதுடன், இரண்டாவது நாள்  பாதுகாப்பான இடங்களில் கொண்டுவிடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .