2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு ஐ.சி.சி எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் போட்டிகள், சென்னையில் இடம்பெறாமலிருப்பதற்கான நிலை காணப்படுவதாக, சர்வதேச கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானம், இப்போட்டிகளை நடாத்துவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 8 நகரங்களில் ஒன்றான சென்னையின் மைதானமாகக் காணப்படுகிறது.

ஆனால், அம்மைதானத்தில் பார்வையாளர் பகுதியின் சில பகுதிகள், சென்னை அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை மீறி, அந்தப் பகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, அவை மூடப்பட்டுள்ளன.

எனினும், சென்னையில் போட்டிகள் இடம்பெற வேண்டுமாயின், முழு மைதானமுமே தயாராக இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, அவ்வாறில்லையெனில், அங்கு போட்டிகள் நடாத்தப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இதன்படி, இத்தொடருக்கான இரண்டு போட்டி அட்டவணைகளை, ஐ.சி.சி அனுப்பி வைத்துள்ளது. ஒன்றில், சென்னை உள்ளடங்கியதாகவும், மற்றொன்றில் சென்னை இல்லாததாகவும், அது வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .