2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலகின் மிகவும் பெறுமதிமிக்க அணியாக டலஸ் கௌபோய்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்பந்தாட்ட லீக் அணியான டலஸ் கௌபோய்ஸ் அணியானது நான்கு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பெறுமதியாகக் கொண்டு உலகின் பெறுமதி மிக்க அணியாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகையால் தரப்படுத்தப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இத்தரப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கால்பந்தாட்ட அணியல்லாத ஒரு அணி முதலிடத்தில் வருவது இம்முறையே முதற்தடவையாகும்.

மேற்படி தரப்படுத்தலில், 3.65 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியையுடைய ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் இரண்டாமிடத்திலும், 3.55 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியோடு மற்றொரு ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான  பார்சிலோனா மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றன.

இப்பட்டியலின் நான்காவது இடத்தில், 3.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியுடன் கூடைப்பந்தாட்ட அணியான நியூ யோர்க் யங்கீஸும், ஐந்தாவது இடத்தில், 3.32 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடன், பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன.

குறித்த பட்டியலின் முதல் 50 இடங்களில் , தேசிய கால்பந்தாட்ட அணிகள் 27 காணப்படுகின்றன. இதேவேளை, ஃபோர்மியுலா வண் அணியான பெராரி, 50 இடங்களிலிருந்து வெளியே சென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .