2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எனது பங்கு பெரிதளவல்ல: மஹேல

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவ்வணியால் விதிக்கப்பட்ட 230 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவ்விலக்கை அடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறித்து மஹேல ஜெயவர்தன, சிறப்பான பாராட்டை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்டுவரும் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து அணிக்கு அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அவ்வணியின் திறமைகள் என்பன பரந்தவை என்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதிலும், தனது பங்கு சிறியதே என அவர் குறிப்பிட்டார்.

'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. திறமையுள்ள வீரர்கள் குழாமுடன் நீங்கள் இணைந்து செயற்படும் போது, அவர்கள் இவ்வாறானதொன்றைச் செய்யும் போது, நீங்கள் அதிகமாக பங்களிப்பை வழங்கினீர்கள் என அனைவரும் எண்ணுவார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜேஸன் றோயின் அதிரடித் துடுப்பாட்டம், அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடித் திறமைகள், ஜோ றூட்டினதும் அணித்தலைவர் ஒய்ன் மோர்கனினதும் புத்திசாலித்தனம், பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோரின் திறமைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அணியில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கத்தக்க 6 வீரர்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

ஜோ றூட்டுக்கு சிறப்பான பாராட்டை வெளிப்படுத்திய மஹேல, வீரராக அவர் முன்னேறுவதற்கு எப்போதும் முயல்கிறார் எனவும், அவரது மனத்திறனையும் அவர் பாராட்டினார். தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியில் ஜோ றூட், 44 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .