2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் போல்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னுஞ் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமைக்கா குழாமில் உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் இடம்பெற்றதையடுத்து, 100 மீற்றர், 200 மீற்றர், 4*100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தனது தங்கப் பதக்கங்களை தக்க வைத்துக் கொள்ள அவர் முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான, ஜமைக்கா தகுதிகாண் போட்டிகளில், பின் தொடை தசை நார் காயம் காரணமாக போல்ட் பாதிக்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக்கில் போல்ட் பங்கேற்பாரா என்ற சந்தேகங்கள் காணப்பட்ட நிலையிலேயே, 63 பேர் கொண்ட பலமான ஜமைக்கா அணியில், ஆறு தடவை ஒலிம்பிக் சம்பியனான போல்ட் இடம்பெற்றுள்ளார்.

100 மீற்றர், 200 மீற்றர் உலக சாதனையாளரான 29 வயதான போல்ட் உட்பட நான்கு பேருக்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டு ஜமைக்கா குழாமில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

தனது உடற்றகுதியை போல்ட் இன்னும் நிரூபிக்கவில்லையெனினும், இலண்டனில் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆண்டுப் பூர்த்தி விளையாட்டுக்களில் கலந்து கொள்வதாக கடந்த வெள்ளிக்கிழமை (08) உறுதிப்படுத்துயிருந்தார்.

கிங்ஸ்டனில் இடம்பெற்ற 100 மீற்றர் தகுதிகாண் போட்டிகளின் முதலாவது சுற்றில், முதலாவது வகை பின் தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்ட போல்ட், அரையிறுதிப் போட்டிகளில் வென்றதுடன் வெளியேறியிருந்தார். ‌


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .