2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானது கோல்டன் ஸ்டேட் வொரியர்ஸ்

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்டச் சங்க (என்.பி.ஏ) இறுதிப் போட்டிகளில், கோல்டன் ஸ்டேட் வொரியர்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

ஏழு போட்டிகள் கொண்ட இறுதிப் போட்டிகளில், முதல் மூன்றிலும் கோல்டன் ஸ்டேட் வொரியர்ஸ் வென்றிருந்தபோதும், நான்காவது போட்டியில், கிளீவ்லான்ட் கவாலியர்ஸ் வென்றிருந்தது.

இந்நிலையில், தமது அரங்கில், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் வெற்றிபெற்றே, 4-1 ரீதியில் தொடரைக் கைப்பற்றி, கடந்தாண்டு கிளீவ்லான்ட்டிடம் தோற்றமைக்கு, கோல்டன் ஸ்டேட் வொரியர்ஸ்,  பழிதீர்த்துக்கொண்டது.

கிளீவ்லான்ட்டை 2015ஆம் ஆண்டும் வென்று சம்பியனாகியிருந்த கோல்டன் ஸ்டேட், குறித்த ஐந்தாவது போட்டியில், 129-120 என்ற புள்ளிகள் கணக்கில், கோல்டன் ஸ்டேட் வெற்றிபெற்றிருந்தது.

இதில், கடந்தாண்டு இறுதிப் போட்டிகளில், மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராகத் தெரிவாகிய கிளீவ்லான்ட்டின் லிப்ரோன் ஜேம்ஸ், 41 புள்ளிகளைப் பெற்றதுடன், எட்டுப் புள்ளிகள் பெறப்படுவதற்கு உதவியதுடன், 13 தடவைகள் எதிரணியிடமிருந்து பந்தைப் பறித்தபோதும், கோல்டன் ஸ்டேட் வெற்றிபெறுவதை அவரால் தடுத்திருக்க முடியவில்லை.

கோல்டன் ஸ்டேட் சார்பாக, முன்கள வீரரான கெவின் டுராண்ட் 39 புள்ளிகளைப் பெற்றதோடு, ஸ்டீபன் கறி 34 புள்ளிகளைப் பெற்றிருந்தார். இந்நிலையில், குறித்த இறுதிப் போட்டிகளின் மிகவும் பெறுமது வாய்ந்த வீரராக, கோல்டன் வொரியர்ஸின் 28 வயதான டுராண்ட் தெரிவாகியிருந்தார். ஒக்லஹோமா சிற்றியிலிருந்து கடந்த பருவகாலத்தில், கோல்டன் ஸ்டேட்டில் இணைந்த டுராண்ட், இம்முறையின் ஐந்து இறுதிப் போட்டிகளிலும், 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததோடு, சராசரியாக, ஒவ்வொரு போட்டியிலும், 5.2 புள்ளிகளைப் பெற உதவியதுடன், எதிரணியிடமிருந்து, சராசரியாக, ஒவ்வொரு போட்டியிலும், 8.2 தடவைகள் பந்தைப் பறித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .