2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டேவிஸ் கிண்ண அரையிறுதியில் பெரிய பிரித்தானியா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் இடம்பெற்ற போட்டியில், சேர்பியாவின் டுஸன் லஜோவிச்சுக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்ற பெரிய பிரித்தானியாவின் கைல் எட்முண்ட், பெரிய பிரித்தானியாவை டேவிஸ் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (16) ஜாங்கோ டிப்சரேவிச்சுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற எட்முண்ட், 6-3, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் லஜோவிச்சை தோற்கடித்து, 3-1 என்ற முன்னிலையை பெரிய பிரித்தானியாவுக்கு வழங்கியிருந்தனர்.

மேற்படி போட்டிக்கு முன்னர், சனிக்கிழமை (16) இடம்பெற்ற இரட்டையர் போட்டிகளில், பிலிப் கிறஜிநோவிச், நெனட் ஸிமோஞ்சிக்கை பெரிய பிரித்தானியாவின் ஜேமி மரே, டொம் இங்லொட் ஆகியோர் தோற்கடித்திருந்தனர்.

எவ்வாறெனினும் எட்முண்ட்டின் வெற்றிக்கு பின்னர் இடம்பெற்ற, முடிவில் தாக்கம் செலுத்தாத போட்டியில் ஜேமி வார்ட், 6-2, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் ஜாங்கோ டிப்சரேவிச்சிடம் தோல்வியடைந்த நிலையில், இறுதியாக 3-2 என்ற ரீதியிலேயே பெரிய பிரித்தானியா வென்றிருந்தது.

இந்நிலையில், கடந்த வருடம் பெல்ஜியத்தில் வென்ற டேவிஸ் கிண்ண பட்டத்தை தக்கவைக்கும் பொருட்டு, எதிர்வரும் செப்டெம்பரில் அரையிறுதிப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்ளவுள்ளது.

பிரித்தானியாவின் முதல் நிலை வீரரான அன்டி மரே மேற்படி போட்டிகளில் பங்கேற்காத நிலையில், பிரித்தானியாவின் முதல்நிலை வீரர் இல்லாமல், உலக குழு டேவிஸ் கிண்ண போட்டியொன்றில் பிரித்தானியா வென்றமை, இதுவே முதற்தடவையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .