2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லெய்செஸ்டரிலிருந்து கன்டேயை கைச்சாத்திட்ட செல்சி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெய்செஸ்டர் சிற்றியின் மத்தியகள வீரரான இன்’கொலோ கன்டேயை ஐந்து வருட ஒப்பந்தத்தில் 30 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு செல்சி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் லீக் வண் அணியான கானிலிருந்து ஆறு மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கடந்த பருவகாலத்தில் லெய்செஸ்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மத்தியகள வீரரான கன்டே, அவ்வணி பிறீமியர் சம்பியனான கடந்த பருவ காலத்தில் 40 போட்டிகளை அவ்வணிக்காக விளையாடியிருந்தார். தவிர, யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில், இறுதிப் போட்டி வரை சென்ற பிரான்ஸ் குழாமிலும் 25 வயதான கன்டே இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், கருத்து தெரிவித்துள்ள கன்டே, ஐரோப்பாவிலுள்ள மிகப் பெரிய கழகங்களொன்றில் கைச்சாத்திட்டமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், தனது கனவொன்று நனவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கன்டே ஒப்பந்தத்தை இறுதிப் படுத்தி, மருத்துவப் பரிசோதனையை முடிக்க முன்னர், தமது கழகம் சாதனை ரீதியிலான தொகையை அனுமதித்துள்ளதாக வெள்ளிக்கிழமை (15) தெரிவித்திருந்தது. தவிர, கன்டேக்கு மேம்படுத்தப்பட்ட, நீண்டகால ஒப்பந்தம் வழங்கப்படுவதாக இருந்த போதும், அவரின் விருப்பம் செல்சியில் இணைவதாகவே இருந்தது என அக்கழகத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெய்செஸ்டரின் முன்கள வீரரான ஜேமி வார்டி, ஆர்சனலுக்கான நகர்வை நிராகரித்த போதும் மற்றொரு முன்கள வீரரான றியாட் மஹ்ரேஸ் கழகத்தினை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .