2024 மே 09, வியாழக்கிழமை

தமீம் இக்பால் அதிரடி; பங்களாதேஷ் அணிக்கு தொடர் வெற்றி

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸிம்பாப்வே அணியுடனான 5 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி இத்தொடரின் வெற்றியை தனதாக்கியுள்ளது.

இன்று நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
 

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 188 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  அவ்வணியின் முதல் 3 விக்கெட்டுகளும் 21 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. அணித்தலைவர் டடேண்டா தைபு 64 ஓட்டங்களைப் பெற்றார்.


ஸகிப் அல் ஹசன் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மஸ்ரபி மோர்ட்டஸா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இம்ரான் காயிஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் 96 பந்துவீச்சுகளில் 95 ஓட்டங்களைப் பெற்றார். 7 சிக்ஸர்கள் 4 பெண்டரிகளையும் அவர் விளாசியமை குறிப்பிடத்தக்கது.

ஜுனைத் சித்தீக் 56 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணி 43 ஓவர்களில் விக்கெட்டுகளை 4 இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 

இத்தொடரின் 4 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரில் 3-1 விகிதத்தில் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியுள்ளது.
 

5 ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரராக தமீம் இக்பாலும் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அப்துர் ரஸாக்கும் தெரிவாகினர்.

பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக இரு ஒருநாள் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இதற்கு முன் நியூஸிலாந்துடனான தொடரிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X