2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரை நாளில் முடிந்த உலகக்கிண்ண ஒருநாள் போட்டி

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் கென்ய அணியை நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வென்றது.

சென்னை நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கென்ய துடுப்பாட்ட வீரர்கள் திணறினர். முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி 23.5 ஓவர்களில் 69 ஓட்டங்களுடன் சுருண்டது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் கென்ய அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். உலகக்கிண்ண வரலாற்றில் எந்தவொரு அணியும் பெற்ற 5 ஆவது ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் இது  விளங்குகிறது.

வேகப்பந்துவீச்சாளர் ஹமிஷ் பென்னட் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிம் சௌதீ றம்றும் ஜேக்கப் ஒராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8 ஓவர்களில் வெற்றி  இலங்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஓருநாள் சர்வதேச போட்டி அரைநாளுடன் முடிவுற்றது.

 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மார்ட்டின் குட்பில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பிரெண்டன் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.  உதிரிகளாக பெற்ற 7 ஓட்டங்களுடன் நியூஸிலாந்து அணி விக்கெட்இழப்பின்றி 72 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹாமிஷ் பென்னட் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .