2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 4ஆவது நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிறிஸ்பேர்ணில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 3 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்ளைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

4ஆவது விக்கெட்டுக்காகத் தொடர்ந்தும் சிறப்பாக ஆடிய எட் கொவான், மைக்கல் கிளார்க் இருவரும் 4ஆவது விக்கெட்டுக்காக 259 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்ததோடு, 5ஆவது விக்கெட்டுக்காக மைக்கல் கிளார்க், மைக்கல் ஹசி இருவரும் பிரிக்கப்படாத 188 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மோர்னி மோர்க்கல் 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த தென்னாபிரிக்க அணி, ஜக்ஸ் கலிஸ், ஹசிம் அம்லா ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் முதலாவது இனிங்ஸில் 450 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இப்போட்டியின் 5ஆவதும் இறுதியுமான நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .