2024 மே 02, வியாழக்கிழமை

பாகிஸ்தான் பிறீமியர் லீக் பாகிஸ்தானுக்கு உதவும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ள பாகிஸ்தான் பிறீமியர் லீக் தொடர் பாகிஸ்தானுக்கு சர்வதேசப் போட்டிகளை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவிகளைப் புரியும் என எதிர்பார்ப்பதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிறீமியர் லீக் தொடரை ஏற்பாடு செய்வதற்காக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள ஹரூன் லோகார்ட், அங்கு வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களைப் பகிரும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இடம்பெற எதிர்பார்க்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிறீமியர் லீக் தொடரில் சர்வதேச வீரர்கள் வந்து பங்குபற்றுவார்களானால் அது மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என ஹரூன் லோகார்ட் தெரிவித்தார்.

சர்வதேச வீரர்கள் பாகிஸ்தான் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றுவார்களானால் பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கைகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிறீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் சர்வதேச வீரர்கள் பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பாக தங்கள் நாட்டுக் கிரிக்கெட் சபைகளுக்கு விளக்கங்களை வழங்கி அந்த நாட்டுச் சபைகளை பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் சுற்றுலாக்களை மேற்கொள்ள உதவ முடியும் என ஹரூன் லோகார்ட் மேலும் தெரிவித்தார்.

இந்தியன் பிறீமியர் லீக், ஶ்ரீலங்கா பிறீமியர், பிக் பாஷ் லீக், பங்களாதேஷ் பிறீமியர் லீக் போன்று உள்ளூர் டுவென்டி டுவென்டி தொடரொன்றைத் தங்கள் நாட்டிற்காக உருவாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தொடர்ந்தும் முயற்சித்து வரும் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் அத்தொடரை நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்போது முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .