2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தம்புள்ளையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள்?

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக தம்புள்ளை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறாது உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உலர் வலயத்தில் அமைந்துள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டால் மழையில் குறுக்கீடுகள் குறைவாகக் காணப்படும் என்பதால் இந்த  மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் காணப்பட்டது.

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடர், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் மழையின் குறுக்கீடுகள் அதிகமாகக் காணப்பட்ட பின்னர் ரங்கிரி தம்புள்ளை மைதானத்தைத் தவிர்ப்பது தொடர்பான கேள்விகள் அதிகமாக எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, தம்புள்ளை மைதானத்தின் மின்விளக்குகளில் தவறுகள் காணப்படுவதாகவும் அவை சீர்செய்யப்பட்டதும் தம்புள்ளை மைதானத்தில் மீண்டும் போட்டிகள் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தம்புள்ளை மைதானத்தின் மின்விளக்குகளை மேம்படுத்தும் பணியில் இலங்கைக் கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த நிஷாந்த ரணதுங்க, மின்விளக்குகளே டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கும் மிகவும் உகந்தது எனத் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தின்படி அடுத்தாண்டு இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின்போது தம்புள்ளை மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .