2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய, சிம்பாப்வே இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முதலாவது போட்டியில் இளம் வீரர்களுடன் களமிறங்கியிருந்ததோடு, இருவர் தங்களது ஒருநாள் சர்வதேசப் போட்டி அறிமுகத்தையும் மேற்கொண்டிருந்தனர். ஜெய்தேவ் உனத்கட், அம்பத்தி ராயுடு இருவரும் அறிமுகத்தை மேற்கொண்ட போட்டியிலேயே மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

சிம்பாப்வே சார்பாக அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகன்டர் ராஸா சிறப்பாக ஆடி 82 ஓட்டங்களைப் பெற்றதோடு, பின்வரிசையில் எல்ற்றன் சிக்கும்புரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

முதலாவது போட்டியை விட, இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே அணியால் அதிக போட்டியை வழங்க முடியுமா?

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

சிம்பாப்வே: வியூசி சிபன்டா, ஷிகன்டர் ராஸா, ஹமில்ற்றன் மஸகட்ஸா, பிரென்டன் ரெய்லர், மல்கொம் வோலர், சியன் வில்லியம்ஸ், எல்ற்றன் சிக்கும்புரா, புரொஸ்பர் உற்செயா, ரீனோரென்டா முற்றோம்பொட்ஸி, கைல் ஜார்விஸ், ரென்டாய் சத்தர

இந்தியா: ஷீகர் தவான், றோகித் சர்மா, விராத் கோலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, வினய் குமார், ஜெய்தேவ் உனத்கட், மொஹமட் ஷமி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .