2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ் வெற்றி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ் அணி இலகுவான 8 விக்கெட்கள் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

நாணய சுழற்சியில் வெறி பெற்ற பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. இதில் JP டுமினி ஆட்டமிழக்காமல் 67 (48 பந்துகள், 4 ஓட்டங்கள் 4, 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரொஸ் ரெய்லர்  ஆட்டமிழக்காமல் 43(39 பந்துகள், 4 ஓட்டங்கள் 4) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், அல்பி மோர்க்கல், வருண்  ஆரோன், யுஸ்வேந்தரா  சஹால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 52 (29 பந்துகள், 4 ஓட்டங்கள் 3, 6 ஓட்டங்கள் 5) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். விராத் கோலி ஆட்டமிழக்காமல் 49 (38 பந்துகள், 4 ஓட்டங்கள் 2, 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மொஹமட் சமி, ராகுல் ஷர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக 4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றிய யுஸ்வேந்தரா சஹால் தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .