2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2015, 2019 உலகக் கிண்ணத் தொடர்களில் 10 அணிகள் மாத்திரமே

Super User   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2015 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் 10 அணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை மும்பையில் கூடிய ஐ.சி.சி. நிறைவேற்றுச் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண சுற்றுப்போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திலும் 2019 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டி இங்கிலாந்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தகக்து.

2015 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டியில் ஐ.சி.சியின் முழுமையான அங்கத்துவமுடைய டெஸ்ட் அந்தஸ்துடைய - 10 அணிகள் மாத்திரமே பங்குபற்றும். ஆனால்  2019 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கான 10  அணிகள் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 2 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐ.சி.சி. உலக ட்வென்டி 20 சுற்றுப்போட்டியில் 16 அணிகள் பங்குபற்றுவதை ஐ.சி.சி. நிறைவேற்றுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கங்கள் முறையற்ற விதமாக கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கும் வகையில் இவ்வருடம் ஹொங்கொங்கில் நடைபெறவுளள் ஐ.சி.சி வருடாந்த மாநாட்டின்போது ஐ.சி.சி. யாப்பை திருத்துவதற்கான யோசனைகளையும் நிறைவேற்றுச் சபை முன்வைத்துள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .