2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

24 மணிநேரம் நீடிப்பு

Editorial   / 2018 மே 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்  

 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை, மேலும் 24 மணிநேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.  

நேற்று மாலை 4 மணிமுதல் இன்று (28) மாலை 4 மணிவரை, இந்த அறிவிப்பு நீடிக்குமெனத் தெரித்துள்ள நிறுவனம்,

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, காலி, குருநாகல், கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களுக்கே, இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

குறித்த பிரதேசங்களில், மண்சரிவுகள் மற்றும் மண் திட்டுகள் உடைந்துவிழும் அபாயங்கள் காணப்படுகின்ற நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், தொடர்ந்தும் இதுகுறித்து அவதானமாக இருக்குமாறு, பிரதேச மக்களிடம், நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.  

விசேடமாக, மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்பட்டவுடன், தமது பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டுமெனவும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.  

இது இவ்வாறிருக்க, நாட்டில் நிலவும் சீறற்ற வானிலை காரணமாக, 43,604 குடும்பங்களைச் சேர்ந்த 166,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரித்த அனர்த்த முகாமைத்துவ நிலையம், மண்சரிவு, மின்னல் தாக்கம், நீரில் அடித்துச் செல்லல் உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி, இதுவரை 23பேர் பலியாகியுள்ளனரெனவும் குறிப்பிட்டது.  

இவ்வாறான நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ள வானிலை அவதான நிலையம், இருப்பினும், மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் குறிப்பிட்டது.  

மேலும், சப்ரகமுவ,மேல், மத்தி, தெற்கு, வடமேல் மாகாணங்களிலும் மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுமெனவும், நிலையம் குறிப்பிட்டது.  

இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வௌ்ளநீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைறப்படுத்திய பின் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக, தூய்மைப்படுத்திக்கொள்வதற்கு   011-2635675 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  

மேலும் நீர்த் தாங்கிகளையும் மேற்குறிப்பிட்ட முறையிலேயே சுத்தம் செய்யுமாறும் கொதித்தாரிய நீரை மாத்திரம் அருந்துமாறும் அறிவுருத்தியுள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .