2024 மே 02, வியாழக்கிழமை

முதற்கனவே...

Princiya Dixci   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதற்றர தொலைத்தொடர்புச் சேவை வழங்குநரான டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம் முதன் முறையாகத் தயாரித்து வழங்கியுள்ள தமிழ் மொபைல் தொலைக்காட்சித் தொடரான “முதற்கனவே” தொடரின் முதன்மைத் திரையிடல், டயலொக் தலைமைக் காரியாலயத்தில், நேற்றிரவு (06) இடம்பெற்றது.  

முற்றுமுழுதாக இலங்கைப் படைப்பாளிகளின் உழைப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான “முதற்கனவே” தொடர், Open Theater தயாரிப்பில் நடராஜா மணிவாணன் இயக்கத்தில், மொபைல் நாடகத்தின் ஓர் அத்திபாரமாக வெளியிடப்பட்டுள்ளது.  

புதிய தலைமுறைக்கு ஏற்ற வகையில், புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தில், இலங்கையின் புகழ்பெற்ற ஜெராட் நோயல், ஸ்ரீதேவி, ராஜஸ்ரீ, ஜெயசோதி, ஷாந்தா உள்ளிட்ட தமிழ்க் கலைஞர்கள் நடித்துள்ளனர்.  

இலங்கை இதழியல் கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளரான இயக்குநர் நடராஜா மணிவாணன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் எனப் பல்வேறு து​றைகளிலும் தடம்பதித்துள்ளார்.  

தனது திறமையை மட்டும் நம்பி தனக்கு வாய்ப்பு வழங்கியமைக்கு, டயலொக் அக்ஸியாட்டா நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தொடரைத் தயாரிப்பதில் தமது குழுவினர் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் தொடர்பில் தனது அனுபவம் குறித்தும், பகிந்துகொண்டார். 

டயலொக் அக்ஸியாட்டா நிறுவனத்தின் க்ளோபல் மற்றும் உள்ளடக்கச் சேவைகள் பிரிவின் சிரேஷ்டப் பொது முகாமையாளர் மங்கள ஹெட்டியாரச்சி மற்றும் இலங்கைக் கலைஞர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

12 தொடர்களாக வழங்கப்படவுள்ள இந்த ‘முதற்கனவே’ தமிழ் மொபைல் நாடகத்தை, டயலொக் ViU விநோதே செயலியை (APP) ​அலைபேசியில் தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்டுகளிக்கலாம்.  

டயலொக் ViU விநோதே செயலி (APP), டயலொக் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களுக்கும் ஏனைய தொலைத்தொடர்புச் சேவையாளர்களுக்கு 2 மாதங்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .