2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக் குழாமில் ஸ்டோக்ஸ்

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடருக்குப் பின்னரான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில், பென் ஸ்டோக்ஸும் அலெக்ஸ் ஹேல்ஸும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அண்மையில், இரவு விடுதிக்கு வெளியே இடம்பெற்ற மோதலில் இருவரும் சிக்கியிருந்ததோடு, குறித்த சம்பவம் தொடர்பான பொலிஸர் விசாரணைகள் முடியும் வரை, இருவரும் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள் என, இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. இதில் ஹேல்ஸ், இப்பிரச்சினையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாறாக ஸ்டோக்ஸ், இன்னமும் இப்பிரச்சினையில் சிக்கியுள்ளதோடு, இருவருமே, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒழுக்கநெறி விசாரணைகளை எதிர்கொள்ளக்கூடும். ஆகவே, இக்குழாமில் இவர்கள் சேர்க்கப்பட்டாலும், ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தொடரில், இவர்கள் விளையாடாமலிருக்கவும் வாய்ப்புள்ளது.

குழாம்: ஒய்ன் மோர்கன், ஜேஸன் றோய், ஜொனி பெயர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ றூட், சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, அடில் றஷீட், ஜோ றூட், டேவிட் வில்லி, லியம் பிளங்கட், டொம் குர்ரான், மார்க் வூட், ஜேக் போல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .