2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் ஸ்டீவ் ஸ்மித்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார்.

இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 212 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்டீவ் ஸ்மித் அடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த டெஸ்டில் 127 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா, 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 157 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் ஹென்றி நிக்கொல்ஸ், 12ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. விராட் கோலி, 4. மர்னுஸ் லபுஷைன், 5. பாபர் அஸாம், 6. பென் ஸ்டோக்ஸ், 7. அஜின்கியா ரஹானே, 8. செட்டேஸ்வர் புஜாரா, 9. ஹென்றி நிக்கொல்ஸ், 10. டேவிட் வோணர்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்திருந்தார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. ஸ்டூவர்ட் ப்ரோட், 3. நீல் வக்னர், 4. டிம் செளதி, 5. ஜொச்ஷ் ஹேசில்வூட், 6. ககிஸோ றபாடா, 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. மிற்செல் ஸ்டார்க், 9. இரவிச்சந்திரன் அஷ்வின், 10. ஜஸ்பிரிட் பும்ரா.

சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 28 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் இரவீந்திர ஜடேஜா, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 30 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் கைல் ஜேமிஸன், 10ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. பென் ஸ்டோக்ஸ், 2. இரவீந்திர ஜடேஜா, 3. ஜேஸன் ஹோல்டர், 4. ஷகிப் அல் ஹஸன், 5. கைல் ஜேமிஸன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .