2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் கிரிக்கெட் மோசடி: ஜனாதிபதி, பிரதமர், அமைச்சருக்கு விளக்கமளிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கிரிக்கெட்டில் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதெனக் பாரதூரமாகக் கூறப்பட்டமை குறித்து விசாரணைகளை தற்போது இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு, ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டமைச்சர் ஆகியோரின் கோரிக்கையில் அவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கியதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார்.

இதேவேளை, விசாரணைகள் தொடருவதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதல்ல என அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விசாரணைகள் குறிப்பிடத்தக்களவு காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அலெக்ஸ் மார்ஷல், இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்றபோதும் எதிர்வரும் நாட்களில் இரண்டு அணிகளும் மோசடியாளர்களிடமிருந்து எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து இரண்டு அணிகளுக்கும் விளக்கமளிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை முதலில் கடந்தாண்டு செப்டெம்பரில் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த உறுதிப்படுத்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபையிடம் முன்னணி வீரர்கள் 40 பேர் கோரிக்கை விடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .