2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காலிறுதியில் ஜுவென்டஸ், சிற்றி

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, கடந்த முறை சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு வந்த ஜுவென்டஸ் மற்றும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆகியன தகுதிபெற்றுள்ளன.

காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸையும் மன்செஸ்டர் சிற்றி, சுவிற்ஸர்லாந்துக் கழகமான எப்.சி பேஸிலை வென்றுமே காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்த ஜுவென்டஸ், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் முதற்பாதி முடிவடைய ஆறு நிமிடங்கள் முன்னிலையில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் சண் ஹெய்ங் மின் பெற்ற கோல் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றது.

இம்முதற்பாதியில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் சண் ஹெய்க் மின்னும் ஹரி கேனும் கோல் பெறும் வாய்ப்புகளை வீணாக்கியதோடு, ஜுவென்டஸின் டக்ளஸ் கொஸ்டா டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் ஜன் வெர்டொங்கனால் வீழ்த்தப்பட்டபோது வழங்கப்பட்டிருக்க வேண்டிய பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை.

தொடர்ந்து, சமி கெதிராவிடமிருந்து வந்த உதையை போட்டியின் 64 கொன்ஸலோ ஹுயூகைன் கோலாக்க கோலெண்ணிக்கை ஜுவென்டஸ் சமப்படுத்தியதோடு, அடுத்த மூன்று நிமிடங்களில் போலோ டிபாலா பெற்ற கோலோடு 2-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வென்று, 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

இதேவேளை, பேஸிலின் மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும் 5-2 மொத்த கோல் கணக்கில் காலிறுதிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .