2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’குக்குக்குப் பதிலாக வருபவர்களை இலக்கு வைக்கலாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் அலிஸ்டயர் குக் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து புதிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை கொண்டிருக்கப் போகையில், குக்கின் இடத்தில் களமிறங்குபவர்களை டெஸ்ட் தொடரின்போது இலங்கை இலக்கு வைக்கலாம் என இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, இலங்கையின் பெறுபேறுகள் பெரும்பாலும் ரங்கன ஹேரத்திலும் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொள்வதிலுமே தங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தவிர, எந்த நிலைமளுக்கேற்றவாறும் தங்களை மாற்றிக் கொள்ளக் கூடிய இங்கிலாந்துக்கெதிரான தொடரானது இலங்கைக்கு கடினாமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள சங்கக்கார, சந்தேகமில்லாமல் இங்கிலாந்தே உலகிலுள்ள சிறந்த சகலதுறை அணியென்றும் 10ஆம் இலக்க வீரர் வரை இங்கிலாந்து சகலதுறை வீரர்களைக் கொண்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, அடில் ரஷீட், மொயின் அலி என மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை நிலைமைகளில் ரஷீட் மிகவும் ஆபத்தானவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான இங்கிலாந்தின் தொடர் இம்மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கின்றபோதும், முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரும் அதைத் தொடர்ந்து ஒற்றை இருபதக்கு – 20 சர்வதேசப் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இதைத் தொடர்ந்தே டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .