2024 மே 04, சனிக்கிழமை

கெட்டாபேயை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 மார்ச் 04 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், அஸ்பன்யோல் அணியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்த றியல் மட்ரிட், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற கெட்டாபே அணியுடனான போட்டியில் வென்றது.

இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற றியல் மட்ரிட்டின் முன்கள வீரர் கரித் பேல் தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். தொடர்ந்து முதற்பாதி முடிவடையும் தருணத்தில் சக முன்கள வீரர் கரிம் பென்ஸீமா வழங்கிய பந்தை கோலாக்கி தனது அணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கிய இன்னொரு முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லா லிகா தொடரில் தனது 300ஆவது கோலைப் பெற்றுக் கொண்டார்.

இதன்பின்னர், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் இரண்டு தடவைகள் மஞ்சள் அட்டை காட்டப் பெற்ற கெட்டாபே அணியின் லொய்க் றெமி சிவப்பு அட்டை காட்டப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, கெட்டாபேயின் ஜோர்ஜே மொலினா, றியல் மட்ரிட்டின் பெனால்டி பகுதிக்குள் வைத்து விதிமுறைகளுக்கு மீறி றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் நாச்சோ மொன்றியலால் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. இப்பெனால்டியை போட்டியின் 65ஆவது நிமிடத்தில் பிரான்ஸிஸ்கோ போர்டிலோ கோலாக்கினார்.

எவ்வாறெனினும், மார்ஷெலோ வழங்கிய பந்தை போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியா ரொனால்டோ தலையால் முட்டிப் பெற்ற கோலுடன் 3-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .