2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதவி விலகினார் நியூசிலாந்து பயிற்சியாளர்

Editorial   / 2018 ஜூன் 07 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஆறாண்டுகளாக இருந்த மைக் ஹெஸன், தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்துக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலப் பகுதியே இருக்கின்ற நிலையிலேயே, ஒக்லன்டில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் அறிவிப்பை மைக் ஹெஸன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் சபை, கடுமையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடுப்பொன்றை எடுத்துக் கொள்ளவும் தனது மனைவி, பிள்ளைகளுடன் மேலும் நேரத்தை செலவிடவும் மைக் ஹெஸன் விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .