2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முக்கோண ரீ-20 தொடர்; எரோன் பின்ச் உலக சாதனை

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாவ்பேயில் நடைபெற்று வரும் முக்கோண இருபதுக்கு-20 தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் எரோன் பின்ச்சின் உலகசாதனை அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 100 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.

ஹராரேயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவ்பே அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய எரோன் பின்ச், அதிரடியாக 10 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் அடங்களாக 76 பந்துகளில் 172 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 போட்டியில் 156 ஓட்டங்களைப் பெற்று அவர் நிலைநாட்டிய சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

இந்நிலையில் பின்ச்சுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டி ஆர்சி  சோர்ட் தனது பங்குக்கு 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

230 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாவ்பே அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாததிரமே பெற்று தோல்வியை தழுவியது. அந்த அணியின் துடுப்பாட்ட்தில் சொலமன் மயர் மாத்திரமே 28 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில், அன்ரு டை மூன்று விக்கெட்டுகளையும், அஷ்டன் ஆகர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் உடனான முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னணி வகிப்பதோடு, தொடரின் மூன்றாவது போட்டி பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாளை மறுதினம் (05) இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .