2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'உள்ளங்கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதும் துஷ்பிரயோகமாகும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர்களை பாலியல் ரீதியாக மட்டுமன்றி சிறுவர்களின் உள்ளங்கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதும் சிறுவர் துஷ்பிரயோகமேயாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை ஹாஹிரா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் இன்று அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன.

இதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படும் போது சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கங்களை குறைக்க முடியும்.

இதில் சம்பந்தப்படும் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு இடம்கொடுக்காத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மாத்திரமல்ல.மாறாக, சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் அவர்களின் உள்ளங்கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதும் அவர்களை இழிவுபடுத்துவதும்  துஷ்பிரயோகங்களேயாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .