2024 மே 08, புதன்கிழமை

'உள்ளூராட்சிமன்றங்கள் மறுசீரமைக்கப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

எதிர்வரும் 06 மாத காலத்தினுள்; கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சிமன்றங்களும்; மறுசீரமைக்கப்பட வேண்டுமென் அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணித்துள்ளார்.

கிழக்கு மாகாண அதிகார எல்லைக்குள் இருக்கும் உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்கள், செயலாளர்களுக்கான கருத்தரங்கு, மாகாணசபை கூட்ட மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்களுக்கு அவர் பணித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள் அதன் பணிகளைச் சரியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு சபைகளும் தங்கள் பிரதேசத்தை மையப்படுத்தி செய்யவேண்டிய பொறுப்புக்கள் பற்றி முதலமைச்சர் தனது கருத்தினை செயலாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இங்கு தெரிவித்த முதலமைச்சர், 'ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் கடமைகளை சரியாக செயற்படுத்தவேண்டும். ஒவ்வொரு மன்றத்துக்கும் கீழுள்ள அதிகாரங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் அந்தந்த மன்றங்களுக்குரிய தேவைகளை உரிய முறையில் செய்யமுடியும்.   

பிரதேசங்களில் பல பிரச்சினைகளும் தேவைகளும் இருக்கின்றன. இவற்றுக்குக்கு சரியான தீர்வுகளை வழங்குபவர்களாக செயலாளர்கள் திகழவேண்டும். மேலும், கிழக்கிலுள்ள அனைத்து மன்றங்கள்; மூலமும் கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கமுடியும். இதற்கான சகல வேலைப்பாடுகளையும் செய்ய செயலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் முன்வரவேண்டும். அப்போதே கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும்.

'கிழக்கில் முதலிடுங்கள்' எனும் மாநாடு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களும் தங்களின் திறமையைக் காட்டவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X