2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

180,000 பேர் தொழிலின்றியுள்ளனர்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 180,000 பேர் எந்தவித தொழிலும் இல்லாதவர்களாக உள்ளனர்.  இவர்களில் 18 வயது முதல் 30 வயதுக்கிடைப்பட்ட  100,000 இளைஞர், யுவதிகளும் அடங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

யு.எஸ்.எய்ட்டின் வாழ்வாதார அபிவிருத்திக்கான உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இறைச்சிக் கோழி வளர்ப்பு முகாமைத்துவ பயிற்சி செயற்றிட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (17) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகுதல், சிறுவயதுத் திருமணம், விவகாரத்து, பெண்கள் வெளிநாடு செல்லுதல் ஆகியனவும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ளன' என்றார்.  

மேலும், தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இடங்களை விட மிக குறைந்து காணப்படுகின்றது.  ஏனெனில் முன்கூட்டியே வெள்ள அனர்த்தம் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை நாம் எடுத்தமையாகும்.

வெள்ள அனர்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 148 குடும்பங்களே இடம்பெயர்ந்து பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது அவர்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். வெள்ள அனர்த்தங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக உலக வங்கி 1100 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போன்று ஐ.ஓ.எம். போன்ற நிறுவனங்களும் உதவிகளை செய்துள்ளன. கித்துல் மற்றும் றூகம் ஆகிய குளங்களை புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .