2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸ் சாவடி அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மண்டூர், பாலமுனை பொலிஸ் சாவடி அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை பொலிஸார் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

மேற்படி பொலிஸ் சாவடி அமைந்துள்ள காணிகள் இந்த டிசெம்பருடன்  விடுவிப்பதாக கடந்த கூட்டத்தில் கூறப்பட்டது. ஆனால், இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

மீள்குடியேறிய மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் காணிகளிலிருந்து பொலிஸார் வெளியேறி, அம்மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்' என்றார்.

இதற்குப் பதில் அளித்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராய்ச்சி, 'வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தின் பிரதான கட்டட வேலை 90 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளது. மீதி வேலை பூர்த்தியடைந்ததும்  இன்னும் 02 மாதங்களில் அவ்விடம் விடுவிக்கப்படும்;;' என்றார்.   

இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி முன்னர் காணிகளை விடுவிக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .