2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'முஸ்லிம்களுக்காக எதிர்க்கட்சி வரிசையிலிருந்து குரல் கொடுக்கவும் ஆயத்தம்'

Suganthini Ratnam   / 2017 மே 22 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'முஸ்லிம் சமூகத்துக்கு சவால் விடுக்கப்படும்;போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாம் அச்சமூகத்துக்காக குரல் கொடுக்கவும் ஆயத்தமாக உள்ளோம்'  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (21)  மாலை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பொதுமக்களிடம்  கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'பதவிகள் எமக்கு முக்கியமல்ல என்பதுடன், எமது சமூகமே  எமக்கு முக்கியமாகும்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்;றும் அவற்றை மேற்கொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும்  முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாம்  தெளிவாகக்  கூறியிருக்கின்றோம்.
முஸ்லிம் சமூகத்தின்  உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் முஸ்லிம் காங்கிரஸ்,  அச்சமூகம் பாதிக்கப்படும்போது  பார்த்துக்கொண்டிருக்காது.

ஓர் இனத்துக்காக மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது  அபிவிருத்திப்  பணிகளை செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது, தேசிய ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு சிங்களவர்கள்,  தமிழர்கள், முஸ்லிம்கள்  ஆகியோருக்கு அபிவிருத்திப்  பணிகளை முன்னெடுத்துள்ளது' என்றார்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .