2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

12 மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காகவும் மற்றும் மக்களுக்கு இடையூறு அற்ற போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கோடும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(4) மட்டக்களப்பு பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்றது.

24 மணிநேரமும் அதிவேக வீதிகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிப்பதற்காக 600 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கத்தக்க  ஒவ்வொன்றும் தலா 36 இலட்சம் ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் மட்டக்களப்பு புதிய பொலிஸ் ரோந்துப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் வழிகாட்டலின் கீழ் இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதிய ரோந்துப்பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும் பற்றி மட்டக்களப்பு, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .