2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கரடியனாற்றில் பலியானவர்களின் மரணச் செலவுக்காக ரூ.15,000

Kogilavani   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
 
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வெடிபொருள் வெடிப்பு சம்பவத்தில் மரணமடைந்த பொதுமக்களின் மரணச் செலவிற்காக தலா 15ஆயிரம் ரூபாஅனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராச ஏ.எச்.எம். பௌசியை அவரது அமைச்சில் சந்தித்த போது அமைச்சர் இது பற்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா  தெரிவிக்கையில்,
 
சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பொதுமக்களுக்கு தலா  ரூபா, 5000  ,தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபா.10000 வீதம் மருத்துவ செலவிற்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்கான நிதி மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 
உயிரிழந்த மற்றும் காயமடைந்த பொது மக்களுக்கும், வீடுகள் உட்பட பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்குவது குறித்தும்  கவனம் செலுத்துவதாக அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாகவும் பொன் செல்வராசா மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .