2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சர்வமத இணக்கப்பாட்டின் மூலம் மனித நேய தீர்வுகளை சாத்திமாக்குவதற்கான செயலமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(றிபாயா நூர்)

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சர்வமத இணக்கப்பாட்டின் ஊடாக மனித நேய தீர்வுகளை சாத்திமாக்கல் எனும் தலைப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் செயலமர்வொன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து, இஸ்லாமிய சமய பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜ்ஹான் பெரேரா, பிரதம நிறைவேற்று அதிகாரி ராமலிங்கம், திட்ட இணைப்பாளர் சமன், நிறைவேற்று இணைப்பாளர் நாதன் மற்றூம் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அஷ்ஷெய்க் சபீல் ஆகியோர் இதில் கருத்துரைகளை வழங்கினர்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய சர்வமத சிவில் சமூக அமைப்பொன்றை ஸ்தாபிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .