2024 மே 09, வியாழக்கிழமை

பெண்களின் பங்கு பற்றுதலுடன் வறுமையினை ஒழித்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வழிகாட்டலில் குடும்பஸ்ரீ திட்டத்தில் "பெண்களின் பங்கு பற்றுதலுடன் வறுமையினை முற்றாக ஒழித்தல்" என்ற தொனிப்பொருளில் ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு பிரதேச செயலகம் தோரும் நடைபெற்று வருகின்றது.

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாதர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் 60 பேருக்கு இன்று சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பயிற்சி வகுப்பக்கள் நடைபெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அரசகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பினை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் ஆரம்பித்துவைத்தார்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பினை கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கே.ஜெயந்தி நடத்தினார்.

இதேபோன்ற பயிற்சி வகுப்புக்கள் கல்குடாத் தொகுதியில் உள்ள கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X