2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாலர் பாடசாலை ஆசியைகளுக்கான கருத்தரங்கு

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

தேசிய முன்பிள்ளைப்பருவ வாராத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசியைகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கொன்று இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மேகராஜ்  ஏற்பாட்டில் இக் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை வடக்கு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிகளிலுள்ள 200 பாலர் பாடசாலைகளில் இருந்து 300 ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் உரிமை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விரிவுரைகள் நடத்தப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .