2024 மே 08, புதன்கிழமை

படுவான்கரை நலன்புரி நிலையங்களிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பாக வெளியேற்ற கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

வெள்ளத்தால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள படுவான்கரை பகுதி நலன்புரி நிலையங்களிலுள்ள 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வைத்திய சிகிச்சை பெறுவதற்கு வழியேற்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற   வெள்ள நிலைமை தொடர்பான விசேட கூட்டத்திலேயே அவர் இந்த வேண்கோளை முன்வைத்தார்.


தற்போது படுவான்கரைப் பகுதியில் எந்தவித வைத்திய வசதியும் இல்லாததால், அப்பகுதிகளிலுள்ள  கர்ப்பிணித் தாய்மார்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.  அத்துடன,; படுவான்கரையில் சில பகுதிகளில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலுள்ளதாகவும்  அங்குள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு முப்படையினரும் தயார் நிலையிலுள்ளதாகவும் இது தொடர்பில் விபரங்கள் தெரிவிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அனேகமான பகுதிகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்களை மட்டக்களப்புக்கு கொண்டுவருவதற்கான  நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X