2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி பெறும் குடும்ப மாணவர்களுக்கு புலமைப் பரிசில்த் தொகை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மஹிந்த சிந்தனை வழிகாட்டலில் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'சிப்தொற' சமுர்த்தி இரண்டாம்நிலைக் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களிலுள்ள உயர் வகுப்பில் கற்கும்  மாணவர்களுக்கு புலமைப் பரிசில் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வருடம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புக் கொடி விற்பனையில் நிதி சேகரித்த உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஏ.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .