2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகர சபையினால் கடைகள் உடைப்பு

Super User   / 2011 நவம்பர் 26 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடியின் பிரதான வீதி குட்வின் சந்தியிலுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் எனக்கூறப்படும் 9 கடைகளை காத்தான்குடி நகரசபை இன்று சனிக்கிழமை உடைப்பதற்கு ஆரம்பித்துள்ளது.

காத்தான்குடி பிரதான விதியின் அபிவிருத்தி நடவடிக்கைளுக்காக இக் கடைகள் உடைக்கப்படுவதாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆப்பள்ளிவாயலுக்கு சொந்தமான இச் சட்ட விரோதகட்டிடங்களை 21.11.2011க்கு முன்னர்  உடைக்குமாறு கேட்டு காத்தான்குடி நகர சபையினால் கடிதம் அனுப்பப்பட்டும் காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் எந்தவித பதிலும் அளிக்காத நிலையிலேயே இக்கடைகளை உடைப்பதாக காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.

இக்கடைகளை உடைப்பதற்கு திராக காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும் அ பள்ளிவாயலினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஸ்த்தளத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


தொடர்புடைய செய்தி:

*எனக்கு வீடு கட்டுவதற்கு கடைகளை உடைக்கவில்லை: நகர சபை தலைவர்

*முட்டாள்தனமான அபிவிருத்திக்காக பள்ளிவாசல் சொத்து வீணாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: காத்தான்குடி நகர சபை உறுப்பினர்


You May Also Like

  Comments - 0

  • Ramesh Saturday, 26 November 2011 09:50 PM

    காத்தான்குடியில் மழை இல்லையோ

    Reply : 0       0

    avathaani Saturday, 26 November 2011 11:06 PM

    முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிர்வாகம் ஏன் மெத்தனமாக இருந்ததோ? 21.11.2011 க்கு முன்னர் உடைக்குமாறு அறிவுறுத்தப்பட்டும், செய்யாதிருந்துவிட்டு போலீசில் முறைப்பாடு செய்வதற்கு காரணம் எதுவாகுமோ?

    Reply : 0       0

    Ossan Salam - Doha Sunday, 27 November 2011 12:02 AM

    பள்ளி நிர்வாகமல்ல எந்த நிர்வாகமாயினும் தவறு எனில் அது தவறு என ஏற்கும் மனோபக்குவம் நம்மிடம் வரவேண்டும். இது சட்ட விரோத கட்டடங்களா என்பது நமக்கு தெரியாது. எனினும் அப்படியாயின் அது எல்லோரையும் சந்திக்கிழுக்கும் விவகாரம் அல்லவா? நகர சபையே இப்படி முன்னின்று இந்த விவகாரத்தை கையாள்வது வரவேற்கத்தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .