2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாசல் மேல் தளத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.அஸ்ரப் தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜூல் அக்பரும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் (எம்.ஏ.), கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஷ்வி, அகில இலங்கை உலமா சபையின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார்,  அகில இலங்கை உலமா சபையின் கல்குடாத் தொகுதி தலைவர்; அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

1997ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரை பட்டம் பெற்று மௌலவிகளாக வெளியேறிய 61 பேருக்கு மௌலவி 'சிறாஜி' பட்டம் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட சிறாஜி மலரின் உரையை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின்   சிஷே;ட விரிவுரையாளரும்; கவிஞருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) ஆற்றினார். விழாவின் சிறப்புரையை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.மின்ஹாஜ் ஆற்றினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .