2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை வெளியேற்ற இணக்கம்

Super User   / 2013 ஜூலை 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட  கடல் பிரதேசத்தில்  வெளிமாவட்ட மீனவர்கள்  சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக  மாவட்ட மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு வாரங்களாக படகுகளில் வந்து தடை செய்யப்பட்ட  வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து செல்வதாக  மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யூன் தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதி கரை வலையில் மீன்கள் பிடிபடுதுண்டு வழமை. இத்தகைய சூழ்நிலையிலே வெளி மாவட்ட மீனவர்கள் மட்டக்களப்பு கடலுக்குள் பிரவேசித்து சட்ட விரோத மீன்பிடித்தலில்  ஈடுபடுவதாக மாவட்ட கரைவலை உரிமையாளர்கள் சங்கம் கூறுகின்றது.

இந்த சட்டவிரோத செயல்பாடுகளினால்  குறிப்பாக  கரைவலை மீன் பிடித்தலே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை குகதாசன் சுட்டிக்காட்டுகின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கரைக்கு அண்மித்த பகுதியிலுள்ள அரலிய  என்ற சிறிய ரக மீன்களை இரையாக உண்பதற்கு  பாரை மற்றும் சூரன் போன்ற பெரிய மீன்கள் கூட்டம் கூட்டமாக வரும் வேளை கரை வலையினால் அவை வளைக்கப்பட்டு இழுப்பது வழமையான கரை வலை மீன்பிடித்தலாகும்.

ஆனால் சட்ட விரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் தடை செய்யப்பட்ட சிறிய வலைக்கண்கள் உள்ள வலைகள் மூலம் அரலிய மீன்களை பிடித்து விடுகின்றார்கள். அத்துடன் அந்த அரலிய எனப்படும் சிறிய ரக மீன்களை குறிப்பிட்ட இடங்களில் பெரிய மீன்களுக்கு இரையாகப் பாவித்து பெரிய மீன்களைப் பிடித்துச் செல்கின்றார்கள்.  இதனால் கரை வலையில் மீன்கள் பிடிபடுவது மிக மிக குறைவாகவே உள்ளது' என்றார்.

வெளிமாவட்ட மீனவர்கள் என்பதற்காகவோ அல்லது வேறு இனத்தவர்கள் என்பதற்காகவோ  இதனைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களது சட்ட விரோத செயல்பாடுகளையே  தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட வெளிமாவட்ட மீனவர் பிரதிநிதிகளுக்குமிடையிலான இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று வியாழக்கிழமை மாவட்ட  மீன்பிடி இலாகாவில் அவசர கூட்டமொன்று கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின் படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்வர்கள் உடனடியாக வெளியேற இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட மீன்பிடி உதவி இயக்குநர் எஸ்.ரி ஜோர்ஜ்  தெரிவித்தார்.

தொடர்தும் சட்ட விரோத மீன்பிடித்தலில் அவர்கள் ஈடுபட்டால்  சம்பந்தப்பட்டவர்களின் மீன்பிடி உபகரணங்கள் தடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட மீன்பிடி உதவி இயக்குநர் எஸ்.ரி ஜோர்ஜ்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .