2024 மே 08, புதன்கிழமை

ஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைச்  சுத்தப்படுத்தி திருத்தியமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இக்கோட்டையை  அழகுபடுத்தும் வேலை 30 மில்லியன் ரூபா செலவில் தெயட்ட கிருள வேலைத்திட்டத்தின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோட்டையின் மேல்தளப்பகுதி, கோட்டையின் வெளிச்சுவர்களின் சிதைவுகளைத் திருத்தியமைக்கும்  வேலைகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், இக்கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைச் சுத்தப்படுத்தி திருத்தியமைக்கும் பணியையும் அழகுபடுத்தும் பணியையும் தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

2.995 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழியை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் வேலைகள் அடங்கிய கோட்டையை அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு இலங்கையின் சிரேஷ்ட நகர திட்டமிடலாளர் பேராசிரியர் பாலி விஜயரத்ன ஆலோசனை வழங்கல், மேற்பார்வை செய்தல், வழிநடத்தல் என்பவற்றினை மேற்கொண்டு வருகிறார்.

டச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X