2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு ஏறாவூருக்கு விஜயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலக வங்கியின் பிரதிநிதிகளடங்கிய குழுவொன்று  மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்தனர்.

இந்த குழுவினர் ஏறாவூர் நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அந்த வேலைததிட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புறநெகும (நகர எழுச்சி) திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபா நிதியில் ஏறாவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

இதன்போது ஏறாவூர் நகர சபையின் தலைவர் அலி ஸாஹிர் மௌலானா மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புறநெகும (நகர எழுச்சி) திட்டத்தின் கீழ் ஏறாவூர் பிரதேசத்தில் சுமார் 15 கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதிகள் மற்றும், சிறுவர் பூங்கா, அலுவலக கட்டிடம், வடிகான் திட்டம், நகர அழகு படுத்தல் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏறாவூர் நகரசபை தலைவர் அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியினால் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .