2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமரசத்தின் பின் ஐவர் விடுவிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  சம்பள நிலுவையில் இரண்டு மாத சம்பளத்தினை வழங்குவதாக நிர்வாகம் புதன்கிழமை(9) அறிவித்திருந்த நிலையில் இன்று  வியாழக்கிழமை(10) வழங்காத நிலையில், ஐந்து பேரை ஊழியர்கள் அறையில் வைத்து பூட்டிய சம்பவம் இடம்பெற்றது.

கணக்காளர், முகாமையாளர், காசாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் இரண்டு பேர் உட்பட ஐந்து பேரை நிர்வாகப் பகுதி காரியாலயத்தில் இருந்து வெளியேறாதவாறு பூட்டி விட்டனர்.

பின்னர் இந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையிலான குழுவினர், ஆலையின் ஊழியர்களோடு கலந்தாலோசித்ததன் பின்னர் பூட்டப்பட்ட கதவு திறக்கப்பட்டது.

இதன் பின்னர் நிர்வாகத்துடனும் ஆலை ஊழியர்களுடனும் கலந்தாலோசித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நாளை வெள்ளிக்கிழமை(11) நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியதாக தெரியப்படுத்தியதையடுத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, பாசிக்குடாவில் உள்ள உல்லாச விடுதிகளுக்கு வாகனேரி குளத்தில் இருந்து பெறப்படும் நீர் காகித ஆலையில் சுத்திகரிக்கப்பட்டே பாசிக்குடாவிற்கு குழாய் மூலம் செல்கின்றது.

ஊழியர்கள் அந்த நீரையும் இன்று பிற்பகல் 03.00 மணி முதல் மூடி இருந்ததுடன், பொலிஸாரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து, அந்த நீர் விநியோகத்தையும் மாலை 06.00 மணி முதல் வழங்கியுள்ளனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .