2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளரி பழ அறுவடை

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, எஸ்.பாக்கியநாதன்

தற்போதைய வெப்பமான காலநிலைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளரிப்பழம் மற்றும்  சிகப்பு வத்தவப்பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  

ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுள்ளள கிரான்குளம், புதுக்குடியிருப்பு தாளங்குடா மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளிலும் வெள்ளரிப்பழம் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

ஒரு வெள்ளரி பழம் 75 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை மு.ப.11.30 மணிக்கு வெப்பநிலை 33.4 பாகை சென்றிகிரேட் என வானிலை நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இவ் அளவீடுகள் தலா முண்று மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அளவிடப்படுவதாகவும்  திங்கட்கிழமை(21) ஆகக்கூடுதலாக 31.9 பாகை சென்ரிகிரேட் பதிவாகியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .