2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாகரையில் இளைஞர் மாநாடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.ருத்திரன், தேவ அச்சுதன்.

பசுமையான வாழ்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் வாகரைப் பிரதேச இளைஞர் மாநாடு கோரளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி தலைமையில் இன்று(24) நடைபெற்றது.

வாகரை மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட 2014ஆம் அண்டுக்கான இளைஞர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக இளைஞர்களின் பேரணி நடைபெற்றது.

அடுத்ததாக அதிதிகள் கலாசார வரவேற்பு நடனங்களுடன் அழைத்து வரப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றல், இளைஞர் சத்தியப்பிரமாணம் என்பவற்றுடன் மாநாடு ஆரம்பமானது.

உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நவிரதனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரை நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்புரையினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்த்தினார் அதனையடுத்து வாகரைப் பிரதேச இளைஞர்களின் பிரேரணைகளும், அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்டது.

அத்துடன், வாகரைப்பிரதேச செயலகத்தின் நினைவுப் பரிசினை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி அரசாங்க அதிபருக்கு வழங்கிவைத்தார்.

இதனையடுத்து, இளைஞர்களுக்கான விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன் தொடர்ந்து இளைஞர் கலா மன்றங்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .