2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 33 வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்தியர்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையாகவுள்ள 33 வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிதாக வைத்தியர்களை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகாதார அமைச்சில் இன்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைருக்குமிடையில் சந்திப்பின்போதே,  மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
கிழக்கின் சுகாதாரத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராட்டினார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 வைத்தியசாலைகளுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 05 வைத்தியசாலைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் 15 வைத்தியசாலைகளுக்கும் மேற்படி தீர்மானத்திற்கமைய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் ரிதிதென்னை, காங்கேயனோடை, வாழைச்சேனை, காயங்கேணி, காத்தான்குடி, மண்டபத்தடி, மகிழவெட்டுவான், நாவற்காடு, வாழையடி வட்டை, உன்னிச்சை, மாங்கேணி, கதிரவெளி, காவத்தமுனை ஆகிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கும்  

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, சம்மாந்துறை, காரைதீவு, ஒழுவில், நிந்தவூர், சொறிக்கல்முனை, திருக்கோவில், பொத்துவில், கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை, கல்முனை வடக்கு வைத்தியசாலை, அம்பாறை தொகுதியில் 04 வைத்தியசாலைகளுக்கும்
 
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கும்புறுப்பிட்டி, மனல்சேனை, கட்டைபறிச்சான், ஈச்சிலம்பற்று ஆகிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .